ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான்.
ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது
அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?
நம்மோ நோக்கி வரும் துன்பங்களால் மனம் பாதிப்படையாத நிலையை அடையும் வரையில் எப்படி ஆனந்தம் வரும்?
நாம் சுதந்திரமாக இல்லாத வரையில் , நம்மை நோக்கி வரும் துன்பங்களை
உதாசீனம் செய்யும் வலிமை இல்லாதவராக இருக்கும் வரை அமைதியினால் உருவாகும்
ஆனந்தம் எப்படி வரும்?
ஆனந்தம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது.
ஆனால் அறியாமையினால் உண்டான கவலை அதை மறைக்கிறது. கவலையை உதறும் அறிவைப்
பெறும்போது நாம் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
No comments:
Post a Comment