மிகவும் பேர்பெற்ற ஒரு மதத் தலைவர் மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.
அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார்.
அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும் பேச
ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை.
மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர்
பார்க்கவில்லை.
ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து
மிக்க மகிழ்ச்சியடைந்தார்.பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய்
அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.
பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது
தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி,இவனெல்லாம் வெளியே
இருக்கிறான்,நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் அய்யா,''
No comments:
Post a Comment