சுயநல சிந்தனையுடன்

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன்.
"உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான்.

விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார்.

வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான்.

"இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே.

போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான்.

'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார்.

அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக "சுயநல சிந்தனையுடன்" இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

மனக்கவலை

ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.

ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் அமைச்சர்.

‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அரசன் கேட்டான்…

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’ என்றார் குரு.

அப்படி என்ன செய்திருப்பார் குரு?

நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’

சொல்லாதே

மலைப்பகுதியில் தனியாய் குதிரைமீது பாடல்கள் பாடியபடி வந்து கொண்டிருந்தார் ஜென் ஞானி.
மாலையாகிவிட்டது. இருட்டத் துவங்கிவிட்டதால் தூரத்தில் வருவது யார் என்று பார்க்கக் கடினமாயிருந்தது. அருகில் எந்த ஊரோ, கிராமமோ தென்படவில்லை.

அந்த வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்த ஜென் ஞானி, தன் முன்னால் யாரோ மயங்கி ரோட்டோரமாகக் கிடப்பதைப் பார்த்தார். உடனே குதிரையை நிறுத்தினார்.

மூச்சு இருக்கிறதா? என்று பார்த்து அந்த நபருக்கு முதலுதவி செய்து குதிரையின் மேலேற்றி அமர்த்தினார். `சீக்கிரம் இவரை ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்று யோசித்தபடி... மயங்கியவரை `நன்றாக அமர்ந்துவிட்டாரா, கீழே விழமாட்டாரா' என்று ஒருமுறை உறுதி செய்துவிட்டு, `சரி நாமும் ஏறலாம்' என்று நினைத்து ஏற எத்தனித்தார்.

அதுவரை மயங்கிக் கிடந்தவர் எழுந்துகொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துச் சுண்டினார். சீறிப் பறந்து ஓட, திகைத்து நின்றார். அவன் மயங்கியவனல்ல. அவன் மயங்கியவன் போல நடித்த ஒரு திருடன்.

`அவ்வளவு நேரம் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட எனக்குப் புரியவில்லை. இது எவ்வளவு பெரிய வேடிக்கை...' என்று நேற்று இரவு நடந்த திருட்டுச் சம்பவத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் பேசினார் குரு. இந்த நிகழ்ச்சியில் தங்களின் குருவை ஆச்சரியமாய்ப் பார்த்த சீடர்களில் ஒருவர் கேட்டார்.

``உங்களுக்கு இது பெரிய திகைப்பாக இல்லையா?''

``இருந்தது. ஒரு வினாடி இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது.''

``எப்படி அது உடனே சரியாக முடியும்?''

``அட! சில மனிதர்களின் சுபாவம் அப்படித்தான். அதான் நடந்தது, நடந்துவிட்டது. மாற்ற முடியாது. இதற்கு மேலும் ஏன் மாற்ற முடியாததை நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும்!'' என்றார் வெகு இயல்பாக. ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை வேறு ஊர் நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.

அடுத்த ஊருக்குள் நுழைந்த ஜென் ஞானி, அந்த ஊர் சந்தை வழியாகச் செல்ல நேரிட்டது.

சந்தையில் தங்களுடைய குருநாதரின் குதிரையைப் பார்த்த சீடர்கள், ``அதோ நம் குதிரை'' என்று உற்சாகச் சத்தமிட்டார்கள். குதிரையை விற்பதற்காக நின்று கொண்டிருந்த திருடன் அதிர்ச்சியடைந்தான்.

``அச்சச்சோ எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டோமோ!'' என பதைபதைத்துக் கொண்டிருந்த திருடனின் அருகே சென்ற ஜென் ஞானி, அவனுடைய தோளைத் தொட்டு, கண்களைப் பார்த்து மெல்ல சிரித்தார். திருடன் பேயறைந்து நின்றான்.

திருடனிடம் ``சொல்லாதே!'' என்றார்.

மிரண்டு போன திருடன், ``எது? என்ன? எதைச் சொல்கிறீர்கள்?'' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.

மீண்டும் சிரித்த சாது சொன்னார். ``அதான் நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?. இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள்.

உனக்கு எப்படி இந்தக் குதிரை கிடைத்தது என்பதை மட்டும் யாரிடமும் சொல்லாதே. மற்றவர்களுக்கு இது தெரிந்தால், நிஜமாகவே ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது கூட உதவாமல் போய்விடுவார்கள். மக்களின் சுபாவம் அப்படி. உன் சுபாவம் இப்படி'' என்று சொல்லிவிட்டுச் சென்ற ஜென் ஞானியைப் பார்த்து, கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தான் திருடன். அழுதபடியே குருவைப் பின் தொடர்ந்தான் திருடன். பிற்காலத்தில் முழுமையாய் மலர்ந்த மிகச் சிறந்த சீடனானான்.

பார்வை

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.

அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

விடாக்கண்டன்

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.

ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.

பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.

அவனிடம் கஞ்சனின் மனைவி,”இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,”எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,’அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.’என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.

ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.

திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

இப்போது கஞ்சன் வெளியே வந்து,”இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,”என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,”இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?”என்று கேட்க கஞ்சன் சொன்னான்,

”நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.”

பதினாறு தலைமுறை

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்… ?

பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா…
கணக்கு பிள்ளை பதில் சொன்னார்..
மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ… என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்…??

இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்… ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை…
ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்… மன்னா..

உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்.. அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்… இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா..

உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்… மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்… மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல… தன்னுடைய மகளிடம் ” நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்… இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா…

சிறுமியின் பதில்… உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்…

யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்… சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்..

இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ… பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்…

இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது….

முடியும்.. முடியும்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஜக்கி வாசுதேவ்

நீங்கள் சந்தோசமாக இருக்கும் போதும் ,கருணையோடு இருக்கும் போதும் ,தாராளமாக வழங்கும் மன நிலையில் இருக்கும் போதும் உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது.

யாராவது குற்றம் செய்ததாக நீங்கள் கருதும் போது,அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது.உண்மையாகச் சொல்லுங்கள்.

நீங்கள் செய்தேயிராத ஒரு குற்றத்தையா அவர் செய்து விட்டார்?நம் பிரச்சினை என்ன?நாம் ஒரு குற்றம் செய்தால் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.வேறு யாரும் பொருட்படுத்தக் கூடாது என்று எதிர் பார்ப்போம்.ஆனால் அதையே வேறொருவர் செய்தால் பெரிது படுத்துவோம்.

மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது.

- ஜக்கி வாசுதேவ்.

தயாரான பதிலுடன்

ஒரு ஊரில் இரண்டு கோவில் பூசாரிகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.
அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர்.

பூசாரிகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.

ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,''எங்கே போகிறாய்?''என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,''காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.

கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.

அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,''இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.
நாளை அவனிடம் இன்று போலவே பேசு.
அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.
உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,''என்றார்.சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,''நீ எங்கே செல்கிறாய்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.

இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,''அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,''
அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,''காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.

'' மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ''நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,''என்றான்.

வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..

உலகமே மாயை

‘உலகமே மாயை!’ என்றார் ஒரு ஜென் ஞானி.

‘அப்படியா? நிச்சயமாகதான் சொல்கிறீர்களா?’ அந்த நாட்டின் அரசன் கேட்டான்.

‘ஆமாம். நன்றாக யோசித்தபிறகுதான் சொல்கிறேன். உலகமே மாயை!’

சரேலென்று தன்னுடைய வாளை உருவினான் அரசன். ‘இப்போதே உங்களைக் கொன்றுவிடப்போகிறேன்’ என்று அவரது கழுத்தில் கத்தியை வைத்தான்.

‘அச்சச்சோ, என்னைக் கொன்னுடாதேப்பா!’ ஜென் ஞானி கதறினார். ‘
‘உலகமே மாயை!’ என்றார் ஒரு ஜென் ஞானி.

‘அப்படியா? நிச்சயமாகதான் சொல்கிறீர்களா?’ அந்த நாட்டின் அரசன் கேட்டான்.

‘ஆமாம். நன்றாக யோசித்தபிறகுதான் சொல்கிறேன். உலகமே மாயை!’

சரேலென்று தன்னுடைய வாளை உருவினான் அரசன். ‘இப்போதே உங்களைக் கொன்றுவிடப்போகிறேன்’ என்று அவரது கழுத்தில் கத்தியை வைத்தான்.

‘அச்சச்சோ, என்னைக் கொன்னுடாதேப்பா!’ ஜென் ஞானி கதறினார். ‘உலகம் மாயை இல்லை. ஒத்துக்கறேன்!’

’சபாஷ்’ அரசன் பெருமிதத்தோடு கத்தியை உறையில் போட்டான். ‘இப்போதுதான் நீங்கள் எதார்த்தமாகப் பேசுகிறீர்கள். இந்த உலகம் மாயை இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி!’

‘யார் சொன்னது? இந்த உலகம் மாயைதான்!’ என்றார் ஜென் ஞானி.

‘இப்போது நான் கத்தியைக் காட்டியபோது வேறுவிதமாகச் சொன்னீர்களே!’

‘கத்தி முனையில் நான் அப்படிதான் சொல்வேன்’ என்றார் அவர். ‘ஆனால் அந்த ஆபத்து நீங்கியபிறகு, அதுவும் மாயைதான் என்பது புரிகிறது. ஆகவே அடித்துச் சொல்கிறேன், உலகம் மாயைதான்!’

’நான் மீண்டும் கத்தியை உருவினால்?’

‘அப்போது மறுபடி உலகம் மாயை இல்லை என்று சொல்வேன். ஆனால் உயிர் பயத்தில் நான் அப்படிச் சொல்வதுகூட ஒரு மாயைதான்!’
இல்லை. ஒத்துக்கறேன்!’

’சபாஷ்’ அரசன் பெருமிதத்தோடு கத்தியை உறையில் போட்டான். ‘இப்போதுதான் நீங்கள் எதார்த்தமாகப் பேசுகிறீர்கள். இந்த உலகம் மாயை இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி!’

‘யார் சொன்னது? இந்த உலகம் மாயைதான்!’ என்றார் ஜென் ஞானி.

‘இப்போது நான் கத்தியைக் காட்டியபோது வேறுவிதமாகச் சொன்னீர்களே!’

‘கத்தி முனையில் நான் அப்படிதான் சொல்வேன்’ என்றார் அவர். ‘ஆனால் அந்த ஆபத்து நீங்கியபிறகு, அதுவும் மாயைதான் என்பது புரிகிறது. ஆகவே அடித்துச் சொல்கிறேன், உலகம் மாயைதான்!’

’நான் மீண்டும் கத்தியை உருவினால்?’

‘அப்போது மறுபடி உலகம் மாயை இல்லை என்று சொல்வேன். ஆனால் உயிர் பயத்தில் நான் அப்படிச் சொல்வதுகூட ஒரு மாயைதான்!’

பாம்பு

ஜென் குரு ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த குரு, நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை.

சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு மூன்று வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், ‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.

அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள். ‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இந்தச் சத்தம் கேட்டு குரு எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.

‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’

பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த குருவுக்கும் பயம் இல்லை. பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்.

உங்கள் பயங்கள் எந்த வகை? அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது குருவின் வழியா? அல்லது குழந்தை வழியா?

ஓஷோ

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள்.

அதைப் பயன்படுத்துங்கள்.
மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம்.
அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள்.

உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.

சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.

- ஓஷோ

காளி

"காளி!’ இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. "அவளா… அவ ஒரு காளி ஆத்தா!’ என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு. ஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர். காளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர். ஆனால், "காளி’ என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும். காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம். இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.
"அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும், அஞ்ஞானமும் நான், பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்…’ என்கிறாள் காளி. உண்மையை மறைத்துக் காட்டு கிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தைக் காண லாம். காளியின் இருப்பிடம் மயானம். பேதங்கள் ஒழிந்து, அகங்காரம் அழிந்து, பஞ்ச பூதங்களோடு மனித சரீரம் லயமாகி விடுகிற நிச்சலமான இடம். "ஆடிப் பாடி மகிழ்ந்த போது, என்னை நீ மறந்திருந்தாலும், நான் உன்னை மறக்காமல், உனக்காக உன்னை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். உன் கடைசி காலத்திலாவது, என் அருள் உனக்கு கிடைக்கும். நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந் தால், உலகம் சவமாகிக் கிடக்கும்.
"இதை விளக்கத் தான், நான், சிவ ரூபமான சவத்தின் மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும். அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது…’ என்கிறார்.
"பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே. சங்கல்ப மாத்திரத்தில் விளையாட்டாகவே செய்யக் கூடியவள். இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள். அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம். கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம். வர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப் பட்டுள்ளது. அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது.
பராசக்தி சிரிக்கிறாள்; அட்டகாசமாகச் சிரிக்கிறாள். "வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே…’ என்கிறாள். வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர்.
காளியை வழிபட, பலவித பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இது தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும். ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் பிரீதியடைகிறாள். காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன. முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று, சகல பாக்கியங்களையும் பெறலாம். "காளி… காளி…’ என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம். நன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன; யாரையும் கெடுப்பதற்கல்ல!

சம அளவு

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல்தெரிகிறதே…” என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

“சம அளவு சார்!” என்றான் சர்வர்.

“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.

சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரைதான் சம அளவு. அந்த அளவில் தான் கலப்போம்” என்றான் சர்வர்.

உள்ளே வெளியே

மிகவும் பேர்பெற்ற ஒரு மதத் தலைவர் மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.

அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார்.

அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை.

மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.

ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி,இவனெல்லாம் வெளியே இருக்கிறான்,நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் அய்யா,''

பரிசு

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.

ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.

அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.

இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.

கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.

இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.

நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.

அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.

இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.

குரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”

ஒருவர் தரும் பரிசை ஏற்றுக் கொள்ளாதவரை, அந்தப் பரிசு கொடுத்தவருக்கே சொந்தமாகிறது. அது மரியாதையாக இருந்தாலும் சரி, அவமரியாதையாக இருந்தாலும் சரி!!

என்ன ஜாதி

கேரளாவில் ஸ்ரீ நாராயணகுரு என்றொரு மகான் இருந்தார்.அவர் ஒருநாள் தோட்டத்தில் வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரில் நம்பூதிரி ஒருவர் வந்தார்.

நம்பூதிரி கேரளத்தில் ஒரு உயர்ந்த ஜாதியினர்.அவர்கள் வந்தால் எதிரில் வருபவர்கள் வழி விட வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டம்.ஆனால் நாராயணகுரு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவில்லை.

அவர் யாரென்று அறியாத நம்பூதிரி அவர் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று எதிர் பார்த்தார்.அவர் அவ்வாறு செய்யாது போகவே அவரைப் பார்த்து,''நீர் என்ன ஜாதி?''என்று கேட்டார்.

குரு அவர்கள்,''என்னைப் பார்த்தால் என்ன ஜாதி என்று உமக்குத் தோன்றுகிறது?''என்று கேட்டார்.

உடனே நம்பூதிரி,''ஒருவரைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியுமா ஜாதியை?''என்று பதில் கேள்வி போட்டார்.

நாராயணகுருவும் உடனே,''பார்த்துத் தெரியாத ஒரு விசயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா?''என்று எதிர் கேள்வி கேட்க,

இவர் ஒரு மகானாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து அவருக்கு வழிவிட்டு நம்பூதிரி ஒதுங்கி நின்றார்.

மரியாதை

மன்னனுக்கு திடீரென ஒரு ஆசை.சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து சென்றால் எத்தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.
உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு தனது மெய்க் காப்பாளனை உடன் அழைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார்.மெய்க்காப்பாளன் முன்னே செல்ல சிறிது இடைவெளியில் மன்னர் பின்னே நடந்து சென்றார்.

வீதியில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக் கண்டு புன் முறுவல் பூத்தவாறு சென்றனர்.மன்னனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை.மன்னனுக்கு மெய்க் காப்பாளனுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்சரியம், மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான கோபம்.

அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார்,''என்ன உனக்கு நாட்டில் எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே,அவ்வளவு செல்வாக்கா,உனக்கு?''அவன் சொன்னான்,

 ''மன்னா,எனக்கு இவர்கள் யாரையும் முன்னேபின்னே தெரியாது.''மன்னன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து அவன் சொன்னான்,''மன்னா,நான் சாலையில் நடக்கும்போது எதிரில் வரும் யாரைப் பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன்.அப்போது எதிரில் வருபவன் எப்படிப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு கட்டாயம் புன்முறுவல் பூப்பான்.இப்போதும் அப்படித்தான் நடந்தது.''மன்னன் அன்று தனது மெய்க் காப்பாளனிடம் நல்லதொரு பாடம் கற்றுக் கொண்டான்.

மகிழ்ச்சி

ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.

என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.

இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.

அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,'' இரண்டாவது நாய் சொன்னது,''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.

நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.

ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.

ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''

நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.

உலகம் மாயை

‘உலகமே மாயை!’ என்றார் ஒரு ஜென் ஞானி.

‘அப்படியா? நிச்சயமாகதான் சொல்கிறீர்களா?’ அந்த நாட்டின் அரசன் கேட்டான்.

‘ஆமாம். நன்றாக யோசித்தபிறகுதான் சொல்கிறேன். உலகமே மாயை!’

சரேலென்று தன்னுடைய வாளை உருவினான் அரசன். ‘இப்போதே உங்களைக் கொன்றுவிடப்போகிறேன்’ என்று அவரது கழுத்தில் கத்தியை வைத்தான்.

‘அச்சச்சோ, என்னைக் கொன்னுடாதேப்பா!’ ஜென் ஞானி கதறினார். ‘உலகம் மாயை இல்லை. ஒத்துக்கறேன்!’

’சபாஷ்’ அரசன் பெருமிதத்தோடு கத்தியை உறையில் போட்டான். ‘இப்போதுதான் நீங்கள் எதார்த்தமாகப் பேசுகிறீர்கள். இந்த உலகம் மாயை இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி!’

‘யார் சொன்னது? இந்த உலகம் மாயைதான்!’ என்றார் ஜென் ஞானி.

‘இப்போது நான் கத்தியைக் காட்டியபோது வேறுவிதமாகச் சொன்னீர்களே!’

‘கத்தி முனையில் நான் அப்படிதான் சொல்வேன்’ என்றார் அவர். ‘ஆனால் அந்த ஆபத்து நீங்கியபிறகு, அதுவும் மாயைதான் என்பது புரிகிறது. ஆகவே அடித்துச் சொல்கிறேன், உலகம் மாயைதான்!’

’நான் மீண்டும் கத்தியை உருவினால்?’

‘அப்போது மறுபடி உலகம் மாயை இல்லை என்று சொல்வேன். ஆனால் உயிர் பயத்தில் நான் அப்படிச் சொல்வதுகூட ஒரு மாயைதான்!’

மனது மாறும்

ஒரு முனிவரிடம் வேதம் கற்க ஒரு அரசன் வந்தான்.யாரும் அங்கு மதிக்கவில்லையென அவனுக்குக் கோபம்.

குருகுலத்தில் ஆசிரியர்,மாணவர் என்ற பாகுபாடு தவிர வேறு எதுவும் கிடையாது.

அரசனும் இங்கே மாணவனே என்று முனிவர் எடுத்துரைத்தார்.''நீங்கள் சொல்வதைக் கேட்பதால் இவர்கள் மனம் மாறிவிடுமா?''என்று மன்னன் கேட்டான்.
மாறும் என்று முனிவர் சொல்ல அதை நிரூபிக்க வேண்டும் என்றான் மன்னன்.
''இந்த அரசன் ஒரு அடி முட்டாள்.படித்தவர்களை மதிக்கத் தெரியாதவன்.கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்,''என்று மற்ற மாணவர்களைப் பார்த்து முனிவர் சொல்ல மாணவர்கள் செய்வதறியாது நின்றனர்.
ஆனால் அரசனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.
வாளை உருவிக்கொண்டு முனிவரை நோக்கிப் பாய்ந்தான்.
''உன்னை யாரும் எதுவும் செய்து விடவில்லையே!பிறகு ஏன் இந்தக் கோபம்?''என்று அமைதியாக கேட்டார் முனிவர்.''அப்படி வேறு ஆசை உள்ளதா?நீங்கள் பேசிய வார்த்தைகள் போதாதா?''என்று கத்தினான் அரசன்.

அப்படியானால் நான் சொன்ன வார்த்தைகள் உங்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை மாற்றிவிட்டன.

அதேபோல மாணவர்கள் மனதிலும் மாற்றிவிடும் என்று பயந்தீர்கள்.

எனவே நான் கூறுவதைக் கேட்கும் மனது மாறும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?''என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.தவறை உணர்ந்தான் அரசன்.

சின்ன

சின்னச் சின்ன துவக்கம்தான் பெரிய வெற்றிக்கு அடித் தளமாகும்.

இரண்டு கைகளால் அணைத்துப் பிடிக்க முடியாத மரம் சிறிய குருத்தாகத் தான் வளர்கிறது.

ஆயிரம் மைல் பயணம் எடுத்து வைக்கும் முதல் அடியிலிருந்து தான் துவங்குகிறது.

பதினான்கு மாடிக்கட்டம் கைப்பிடி அளவு மண்ணிலிருந்துதான் உருவாகிறது.

மரங்கள் ஒவ்வொன்றும் சேர்ந்துதான் தோப்பாகிறது.

எழுத்துக்கள் சேர்ந்துதான் வார்த்தையாகின்றது.

வார்த்தைகள் சேர்ந்தால்தான் நூலாகின்றது.

நூல்கள் சேர்ந்தால்தான் நூலகமாகிறது.

நூல் இழைகள் சேர்ந்தால்தான் ஆடையாகிறது. அந்த ஆடைதான் மானங்காக்கிறது.

ஆழ்ந்து சிந்திக்கும்போதுதான் சின்னச் சின்ன துவக்கத்தின் மகிமை புரியும். எந்தச் செயலும் தாமாக நிகழ்வதில்லை. நாம் உயிர் வாழ வேண்டுமானால் நாம்தான் சுவாசித்தாக வேண்டும். நாம்தான் உணவு உண்ண வேண்டும். நமக்காகப் பிறர் செய்ய முடியாது. அதைப்போல் எந்தச் செயலையும் நாம்தான் துவக்க வேண்டும். முன் கூட்டியே திட்டமிட வேண்டும். முதலில் செய்யப்போகும் செயலை மனக் கண்ணால் பார்க்க வேண்டும். பிறகு ஒரு தாளில் எழுத வேண்டும். அப்போதுதான் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றும் தென்படும். அதிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

சரி. எல்லாம் முடிவாகிவிட்டது. எப்படித் துவக்குவது? என்ற கேள்வி பிறப்பது இயல்பே. குழப்பமே வேண்டாம். சின்னதாகத் துவக்குங்கள். சின்னதாகத் துவக்கும்போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனே சரி செய்து விடலாம். இதனைத் தான் திருவள்ளுவர்.

"இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து''
என்கிறார்.

ஆன்மா


ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான். அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது சிந்தித்த பின்னர், முனிவர் கூறியதன் பொருள் இதுவாக இருக்காது, அதற்குமேல் ஏதோ பொருள் இருக்கவேண்டும் என புரிந்து கொண்டான். எனவே முனிவரிடம் திரும்பச் சென்று, சுவாமி, இந்த உடலைத்தான் ஆன்மா என்றீர்களா? ஆனால் எல்லா உடல்களும் அழிந்து போவதை நான் காண்கிறேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா? என்று கேட்டான். கண்டு பிடி, நீயே அது என்று மீண்டும் முனிவர் கூறினார்.

இப்போது அந்த தேவன் பிராணனே ஆன்மா என்று புரிந்து கொண்டான். ஆனால், தான் சாப்பிட்டால் பிராண சக்தி வலிமையுடன் இருப்பதையும், சாப்பிடாவிட்டால் அது பலவீனமடைவதையும் சில நாட்களில் கண்டு கொண்டான். எனவே திரும்பவும் முனிவரிடம் சென்று, சுவாமி, பிராணனையா ஆன்மா என்று சொன்னீர்கள்? என்று வினவ, அவர் திரும்பவும், நீயே அது, கண்டுபிடிஎன்றார். இப்போது தேவன் யோசிக்கலானான். ஆன்மா என்பது ஒருவேளை மனமாக இருக்கலாமோ? ஆனால் மனதின் எண்ணங்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே. எனவே மாறுகின்ற மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று கருதிய அவன் திரும்பவும் முனிவரிடம் சென்று, சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என நினைக்கிறேன். நீங்கள் அதையா சொன்னீர்கள்? என்று கேட்டான். அவரோ மறுபடியும், நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார். தேவன் வீடு திரும்பினான். இறுதியில் தீவிர ஆராய்ந்து, தான் உடலல்ல, மனதல்ல, பிராணனல்ல, அவைகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மா. அது பிறப்பு, இறப்பு இல்லாதது; அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, தண்ணீர் நனைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது. அது ஆதி அந்தம் இல்லாதது; அசைக்கமுடியாதது, தொடுதற்கரியது, எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது; என்பதையெல்லாம் தெரிந்து கொண்டான். உடலை நேசித்ததால், பாவம் அசுரன், உண்மையை அறியவில்லை.

நமது குறிக்கோள் ஆன்ம முக்தியே. அதற்குக் குறைந்த எதுவுமல்ல. நாம் இயற்கையின் எஜமானர்களாக இருக்க வேண்டும்; அடிமைகளாக அல்ல.

உடலோ, மனமோ நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. உடம்புதான் என்னுடையதே தவிர, நான் உடலுக்குரியவன் அல்ல என்பதை மறக்கக்கூடாது.

மனிதனே மிகச் சிறந்த உயிர். மனிதன் மட்டுமே ஆன்மநிலையை எய்தமுடியும், தேவர்களாலும் முடியாது.
மனித வாழ்க்கையின் லட்சியம்தான் எவ்வளவு உயர்ந்தது என்பது புரிகிறதல்லவா?

---- சுவாமி விவேகானந்தர்.

ஆன்மீக வாழ்கை

உண்மையான ஆன்மீக வாழ்கை..


ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
 மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

ALL IS NOT GOD, BUT GOD IS ALL

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அன்பே சிவம்.

மனம்


நாம் கண்ணால் காண்கிறோம். கண் என்பது புலன். இது புலன்களில் ஒன்று. ஐம்புலன்களும் அகந்தையால் ஏற்படுத்தப்பட்டவை. புலன்கள் அகந்தையின் கருவிகள். தவசி கண்மூடி தியானிக்கும்பொழுது புலன்கள் அவிகின்றன. புலன்கள் குவிந்து, அவிழ்ந்தால் மனம் விழித்துக் கொள்ளும். புலன்கள் அவிந்த பின் மனம் தானே புலனின்றிச் செயல்படும்.

கண் மூடியிருக்கும்பொழுது பார்க்கும்.

காதை மூடிக் கொண்டாலும் கேட்கும்.

தொடாவிட்டாலும் தொடு உணர்ச்சியிருக்கும்.

முகராவிட்டாலும் வாசனை தெரியும்.

சுவைக்காவிட்டாலும் ருசி தெரியும்.

விழிப்படைந்த மனம் நிஷ்டையில் மேலே போகும். மனத்தினுள் ஆத்மா மனோமயப் புருஷன் உண்டு. தூய்மையான மனத்தின் ஆத்மா மனத்திலிருந்து விடுதலை பெறும். விடுதலை பெற்று உயரும். உயரும் ஆத்மா பிரம்மத்தை அறிய அவாவுடையது. மனம் பகுதியானது. பகுக்க ஏற்பட்ட கருவி. பிரம்மம் முழுமையானது. முழுமையான பிரம்மத்தைப் பகுதியான மனம் காண முடியாது. பிரம்மத்தின் ஓர் அம்சம், அல்லது ஓர் உருவம், ஒரு தோற்றம் மட்டும் தெரியும். அப்படி மனம் பிரம்மத்தைக் காண முயன்றால் பிரம்மம் சச்சிதானந்தமாகத் தெரியும்.

பகுதியான மனத்தின் பார்வைக்கு பிரம்மத்தின் ஓர் அம்சமாக சச்சிதானந்தம் தெரியும்.
பிரம்மம் சச்சிதானந்தமில்லை.
சச்சிதானந்தம் பிரம்மத்தின் ஒரு தோற்றம்.
சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று அம்சங்களுள்ள சச்சிதானந்தத்தின் ஒரு பகுதியே மனத்தின் பார்வைக்குத் தெரியும்.
அப்படிக் காணும் ரிஷிகள் சத்தைக் கண்டால், அதை சச்சிதானந்தத்தின் ஓர் அம்சம் எனக் கொள்ளாமல் சத் என்பதையே முழு சச்சிதானந்தம் என்பர். அதேபோல் சித்தை மட்டும் காண்பவர்களும், ஆனந்தத்தை மட்டும் காண்பவர்களும் அவற்றையே முழு சச்சிதானந்தம் என்பர். மனம் இப்படி மட்டும் செயல்படும் தன்மையுடையது.
தவத்தின் உயர்வுக்கேற்ப சத் தன்னை வெளிப்படுத்தும்.
சத் என்பதை Self என்று ஆங்கிலத்தில் குறிக்கிறார்.
இந்த Selfக்கு 4 நிலைகள் உள்ளன.
முதல் நிலை கடந்த நிலை Transcendent Self.
அடுத்தது பரமாத்மா எனும் Superconscient Self.
அதற்கும் அடுத்தது பிரபஞ்சத்தின் ஆத்மா எனும் Cosmic Self.
கடைசியானது அக்ஷரப் புருஷன் எனும் Immutable Self.

கடந்ததை Self எனவும் பிரபஞ்சத்திற்குரியதை Soul எனவும் குறிக்கிறார். தவத்தின் நிலைக்கேற்ப சத் புருஷன் தன்னைத் தவசிக்கு வெளிப்படுத்துகிறான். மனிதனிலுள்ள பிரம்மத்தை self எனக் குறிக்கிறார். மனிதனுடைய selfலிருந்து கடந்த நிலையிலுள்ள Self வரை எல்லாவற்றையும் தழுவும் சொல் spirit, ஆன்மா எனப்படும்.

முழுமையான சச்சிதானந்தத்தின் அம்சங்கள் பகுதியான மனத்திற்குப் பிரிந்து எதிரெதிரானவையாகத் தெரிவதற்கும் நல்ல உதாரணம், ஈஸ்வரன் இது சச்சிதானந்தத்தின் முழுமையான மூன்று அம்சங்களில் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் ஒன்று. சத்திய ஜீவியத்திலிருந்து பார்த்தால் ஈஸ்வரன் முழுமையாகத் தெரிவான். இதற்கு நிர்குணம், சகுணம் இரண்டும் உண்டு.
தெய்வீக மனத்திலிருந்து பார்த்தால் ஒரு புறம் நிர்குணமாகவும், அடுத்த பக்கம் சகுணமாகவும் தோன்றும்.

இவனும் அவனாகலாம்

இந்தப் பிரபஞ்சத்தில் மானுடன் ஒரு துரும்புக்குச் சமமானவன். ஆனால் அவனோ தன்னை ’யானை’ அளவுக்கு பலம் மிகுந்தவனாக, பெரும் புகழ் படைத்தவனாக, மாபெரும் வீரனாக, அறிவாளியாகக் கற்பனை செய்து வாழ்கிறான். ஆனால் மிருகங்களுக்கு, பறவைகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட, ’சுனாமி’ போன்றவை வரும்போது தன்னைக் காத்துக் கொள்ளும் எச்சரிக்கைத் தற்காப்பு உணர்வு கூட அவனுக்கு இல்லை. ஆனால் தன்னை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக அவன் நினைத்துக் கொள்கிறான். அப்படியே நம்புகிறான். கடைசியில் எல்லாம் மாயைதான் என்பதை உணரும் போது ஏதாவது கலர் துண்டையோ, கலர் மோதிரத்தையோ அணிந்து தற்காத்துக் கொள்ள நினைக்கிறான். சாமியார்களின் காலடியைத் தஞ்சமடைகிறான். வெளியே ’இல்லை’ என்றும் உள்ளே ’இருக்கு’ என்றும் சொல்கிறான். வேஷம் போடுகிறான். போலி ஆன்மீகவாதியாக, போலி நாத்திகவாதியாக நடிக்கிறான்.

’இல்லை’ என்று சொல்லவில்லை; ’இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றுதான் சொன்னேன் என்று பசப்புகிறான். கடவுளை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல; கடவுளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று வார்த்தை ஜாலம் செய்கிறான். “நானாத்திகன்” என்று சிலேடை மொழிகிறான்.

வேண்டுதல் வேண்டாமை இலானிடம் போய் பிடித்திருக்கிறது; இல்லை என்றெல்லாம் வாதிட முடியுமா என்ன? கடந்து நிற்பதனால் தானே அவன் கடவுள். அவனை அறிய உள்ளே அல்லவா கடக்க வேண்டும். வெளியே தேடினால் என்ன கிடைக்கும்? அது தெரியாமல் பிதற்றி என்ன பயன்?

என்னத்தைச் சொல்வது? இப்படி மனிதன் அகத்தைப் பார்க்காமல் புறத்தை மட்டுமே பார்த்து, அதையே உண்மை என்று நம்பி, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதைக் கண்ட ஆதங்கத்தால் எழுந்தது.

ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

தெருக்கூத்து பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டானாம் ஒருவன். எனவே தன்னுடைய பாயையும் கையோடு எடுத்துக் கொண்டு கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே கூத்து இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பதை அறிந்து, தன் பாயை விரித்து அங்கே படுத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான். அவன் கண் விழித்துப் பார்க்கும் பொழுது கூத்து முடிந்து விட்டிருந்தது. அதனால் வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல், தன் பாயையும் சுருட்டி தன் கையோடு எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

பல மனிதர்களின் உலகியல் வாழ்வும் இப்படித்தான், அனுபவம் பெறுவதற்காக பிறப்பெடுக்கும் அவர்கள், எந்தவித அனுபவமும் பெறாமல் மீண்டும் மறு பிறப்பெடுக்கச் சென்று விடுகின்றனர். அவர்களை கையோடு கொண்டு வந்து விட்டு, கையோடு கொண்டு செல்லும் பாய் தான் கர்மா!”

கர்மாவைத் தொலைக்க வந்த மனிதன் அந்தக் கர்மாவை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறான். அதிலும் பல தவறான வழிகளில் சென்று… அவ்வளவு எளிதில் தொலைக்க இயலாத கர்மாவை, தவறு என்று தெரிந்தும், மனசாட்சி எச்சரித்தும், அதனை மீறி மூட்டை மூட்டையாக சேர்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

ஒன்றும் சொல்ல முடியாது. யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ, பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர் சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான் அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள் அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே முக்கியம்.
எல்லாம் அவன் செயல். அந்த ’அவன்’, இவனே! இதை இவன் உணர்ந்தால் இவனும் அவனாகலாம். அவனே இவனாக இருக்கும் உண்மையையும் உணர்ந்து சீவன் சிவனாகலாம்.

ஆன்மீகவாதிகள்

ஆன்மீகம் என்றால் என்ன?
----------------------------------------

நம்மைச் சுற்றி இருக்கும் காற்றினை நம்மால் காண முடியாது. ஆனால்
உணர முடியும். இவ் விஷயத்தை உண்மை என வைத்துக் கொண்டால் ஏதோ ஒரு சக்தி நம்மைச் சூழ்ந்து இருக்கிறது என்று நம்பலாம். இந்த வகையில் ஆன்மீகம் என்பது அந்த சக்தியின் பால் நம் மனதைச் செலுத்தி, அச் சக்தியின் இருப்பை உணர்வது. சுருக்கமாய் சொல்வது என்றால் இறைச் சக்தியை உணர்வது என்பது ஆன்மீகம் எனப்படும்.

ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவர்கள் யார்?
------------------------------------------------------------------

யார் பிறருக்கு தீங்கு செய்யாமல், பிறத்தியாரின் வாழ்வு உயர உழைக்கின்றார்களோ அவர்களே ஆன்மீகவாதிகள் எனப்படுவர்

குரு என்பவர் யார்?
----------------------------

குரு தன்னை சிஷ்யனிடம் ஆதாரமாய் வைத்து, அவனைக் குருவாய் மலரச் செய்பவர்.

ஞானிகள் என்று சொல்லப்படுவர்கள் யார்?
--------------------------------------------------------------

ஞானிகள் என்போர் எவருக்கும் குருவாய் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே பிறருக்கானதாய் வாழ்பவர்கள் ஞானிகள் எனப்படுவர்.

யோகிகள் என்பவர்கள் யார்?
----------------------------------------

யோகக்கலையின் மூலமாய் கடவுளை அடைய முயற்சிப்பவர்கள் யோகிகள் எனப்படுவர்.

சித்தர்கள் என்று அழைக்கப்படுவர்கள் யார்?
----------------------------------------------------------------

சித்தர்கள் என்போர் கடவுளுக்கும் நிகரானவர்கள். குடும்பவியல் வாழ்வைத் துறந்து, தன்னையே கடவுளாய் மாற்றிக் கொண்டவர்கள் சித்தர்கள்.

மகான் என்பவர் யார்?
------------------------------

அவர் ஒரு வழிகாட்டி. ஆனால் கடவுள் அல்ல. கடவுளை அடைய பிறருக்கு வழிகாட்டுபவர்கள் மகான்கள் எனப்படுவர்.

மேற்கண்ட அனைவருக்கும் உள்ள ஒற்றுமை – மனிதர்கள் அனைவரும் கடவுளை உணர வேண்டுமென்று நினைப்பவர்கள். வேற்றுமை – இவர்களின் வழிமுறைகள் வேறுபாடுடையதாகும்.

இவர்கள் இந்த மண்ணில் ஏன் அவதரிக்க வேண்டும்?
------------------------------------------------------------------------------

மனிதர்களின் வாழ்வு சிறக்கவும், மனிதர்களின் பிறப்பு நோக்கத்தை உணர வைக்கவும் இவர்கள் அவதரிக்கின்றார்கள்.

ஆனந்தம்

ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். 
 

ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

நம்மோ நோக்கி வரும் துன்பங்களால் மனம் பாதிப்படையாத நிலையை அடையும் வரையில் எப்படி ஆனந்தம் வரும்?

நாம் சுதந்திரமாக இல்லாத வரையில் , நம்மை நோக்கி வரும் துன்பங்களை உதாசீனம் செய்யும் வலிமை இல்லாதவராக இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

ஆனந்தம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. ஆனால் அறியாமையினால் உண்டான கவலை அதை மறைக்கிறது. கவலையை உதறும் அறிவைப் பெறும்போது நாம் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

இயற்கை

மனிதன் பண்டைக் காலத்தில் இருந்தே இயற்கையோடு இசைந்த வாழ்க்கை நடத்தி வந்தான். இயற்கையைப் போற்றினான் வழிபட்டான்.

எந்திரங்கள் வந்ததும் மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடி அதை அடக்க முற்பட்டான்.

 மனிதன் இயற்கையை அடக்க முயற்சிக்கும் போது இயற்கை மனிதனை விழுங்க முயற்சிக்கின்றது.

 அண்மையில் சீனாவில் HE ZUO XIU என்ற அறிவியல் அறிஞரும் LIANG CON JIE என்ற இயற்கை ஆதரவாளரும் ஒரு விவாதம் நடத்தின்ர். அதன் அடிப்படையில் ஒரு உரையாடலை இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ராஜராம் தயாரத்து வழங்குகிறார். உடன் பங்கேற்பவர் கலையரசி. இயற்கையா? மனிதனின் சுயநலமா?- எது முக்கியம்? உரையாடல் கேளுங்கள்:

கலை........மனிதர்கள் இயற்கையை மதிக்க வேண்டும். இயற்கையிடம் அஞ்ச வேண்டும்.
ராஜா........உண்மைதான். மனிதர்கள் இயற்கையோடு தங்களுக்கு உள்ள உறவு பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை மனிதன் நடத்தாவிட்டால் அண்மையில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படத்தான் செய்யும்.

கலை........இயற்கையின் சட்டம் என்ன தெரியுமா?அளவுக்கு மீறி அதைச் சுரண்டினால் இயற்கை உங்களை விழுங்கிவிடும். மனித குலத்தை இயற்கை பழிவாங்கத் தொடங்கினால் கடைசியில் இந்த உலகத்தில் உயிரினம் எதுவுமே மிஞ்சி இருக்காது. இதுதான் நமக்கு சுனாமி தந்த படிப்பினை. ஆகவே மனிதன் இயற்கையைத் தொடாமல் இயற்கையோடு விளையாடாமல் இருப்பதே நல்லது. 
 
ராஜா........இதை ஒப்புக் கொள்ளமாட்டேன். இயற்கை மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். மனிதன் தனது வாழ்க்கை மேம்படுவதற்கு இயற்கையை பயன்படுத்துவதில் தவறில்லை. இதற்கு உறுதுணையாக அறிவியலும் தொழில் நுட்பங்களும் உள்ளன.
கலை........முன்பு எல்லாம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால் அல்லது அது பற்றிய அறிவு குறைவாக இருந்தததால் இயற்கையை மாற்ற மக்களால் முடியவில்லை. இன்றோ மனிதன் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் தனது பிடிக்குள் எடுத்துக் கொண்டு விட்டான். இதனால் இயற்கை மீது மாற்ற முடியாத ஒரு தாக்கம் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அறிவியல் தொழில் நுட்பத்தின் பலன்களை மக்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அண்மையில் பொங் பின் என்ற இயற்கை பாதுகாப்புத் தொண்டா ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது இந்த பூமியிலே பல உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலே மனிதனும் ஒன்று. அவ்வளவுதான் மற்ற உயிரினங்கள் எல்லாம் சுமார் 4600 கோடி ஆண்டுகளாக பூமியில் இருக்கும் போது மனிதனின் இருப்போ 60 லட்சம் ஆண்டுகள் தான். இப்படி இருக்கும் போது மற்ற உயிரினங்களை பலி கொடுத்துவிட்டு தான் மட்டும் வாழணும் என்று மனிதன் நினைப்பது சுயநலம் இல்லையா?

ராஜா........அதற்காக இயற்கையைத் தொடாதே என்று சொல்வதா? தொடக்க காலத்தில் இயற்கை சக்திகளிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் ஆற்றலை மனிதன் பெற்றிருக்க வில்லை. அல்லது அவனிடம் இந்தப் பாதுகாப்பு ஆற்றல் ஒரு வரம்புக்கு உட்பட்டே இருந்தது. இப்போது தீவிரமான அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இயற்கையை எதிர்த்துப் போராடுவதிலும் இயற்கையை தனது வழிக்குக் கொண்டு வருவதிலும் மனிதனுடைய ஆற்றலும் உயர்ந்து விட்டது. மேலும் இயற்கையினால் உண்டாகும் பேரழிவுகளைக் கட்டுப்படுத்தவும் சில வேளைகளில் இயற்கைச் சீற்றம் ஏற்படாமல் தடுக்கவும் மனிதன் தெரிந்து கொண்டான்.

நினைவூட்டு


ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில்

"தந்தை இறக்கிறான்,
மகன் இறக்கிறான்,
பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார்.

அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. "என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன்.

எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும்.

அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள்.

அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும். அதையே சந்ததியினரும் பின்பற்றுவர்.

ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்.

மறதி

பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!

இப்பவாவது உணர்ந்தியே!

கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

டைம் ஈஸ் மனி

டைம் ஈஸ் மனி
------------------------

"எண்பது ரூபாயில் ஒரு வாரத்துக்கு வாழ்வது எப்படி?" ஆனால், "ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்துக்கு எப்படி 'வாழ்வது'?", என்பது போன்ற எந்தக் கட்டுரையையும் நான் கண்டதில்லை. இருந்தாலும், 'டைம் ஈஸ் மனி' என்று சொல்கிறார்களே. காலம் என்பது பணத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என்பது என்னவோ உண்மைதான்.
பொதுவாகவே, கையில் நேரம் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியது.

ஆனால், உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தாலும் எனக்கு இருக்கும் அதே அளவிலான மணித்துணிகள் தான் உங்களிடமும் இருக்கும்.

தத்துவவாதிகள் 'வெளி'யை விவரித்திருக்கிறார்கள். ஆனால், காலத்தை விவரித்ததுண்டா? காலம் தான் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள்.
ஆதிமூலம் அல்லது லோகமூலம் அது. அதைக் கொண்டு எதையுமே சாத்தியப் படுத்தலாம். நேர உற்பத்தி என்பதுதான் இந்த யுகத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்றால் அது மிகையில்லை.

ஒரு ஆச்சரியகரமான சம்பவமாகவும் அது இருக்கக்கூடும்! காலையில் எழுந்து கொண்டதுமே உங்களின் பணப்பையில், அற்புதமான இருபத்துநான்கு மணிநேரம் நிரம்பியிருக்கிறது! அம் மணித்துளிகள் யாவுமே, உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே உரியது. அவைதான் ஒருவர் உரிமை கொண்டாடக்கூடிய மிகவும் மகத்தான சொத்து. அந்தச் சொத்தினை உங்களிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது; திருட முடியாது. உங்களை விட அதிகமாகவோ குறைவாகவோ வேறு யாரிடமும் இருக்கவும் இருக்காது...

ஒரு மகத்தான மக்களாட்சியில், காலம் எனும் பெரும்சக்தியின் முன், செல்வத்தின் அதிகாரங்களோ, அறிவின் அதிகாரங்களோ செல்லுபடியாகுமா! அறிவாளிகளுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கிடைக்கிறதா? இல்லையே.

இந்த மதிப்புமிகுந்த நேரத்தை கவனமுடன் கணக்குபோட்டுச் செலவிட்டுப் பாருங்கள். அதன்பலன் முழுக்க முழுக்க உங்களுக்கே உரித்தானதாகிவிடும்.

"இவன் முட்டாள் இல்லை. வெகுளியும் இல்லை. இவனுக்கு இனிமேல் 'நேரம்' வேண்டாம். இவனுக்குரிய நேரத்தை இனி வெட்டி விடுவோம்", என்று எந்த ஒரு மர்மசக்தியும் போடமுடியுமா கத்தி? நேரம் கொடுக்கும் பலம் ஞாயிறுகளால் தடைபடாது. எதிர்காலத்தை இப்போதே செலவிடமுடியாது.

ஆகவே, கடன் தொல்லையும் இல்லை! "நிகழ்காலத்தை வேண்டுமானால் வீணடிக்கலாம்".

நாளையை வீணடிக்க முடியாது.
அது உங்களுக்காகக் காத்திருக்கும்
அடுத்த மணித்தியாலத்தையும் வீணாக்க முடியாது. அதுவும் உங்களுக்கென்று காத்திருக்கும்.

நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!

பிரதிபலன்

 விவசாயி ஒருவர் 1 பவுண்டு வெண்ணெயை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார்.
 ஒரு நாள் அந்த பேக்கரிக்காரர், விவசாயி கொடுக்கும் வெண்ணெய் ஒரு பவுண்டு அளவு சரியாக உள்ளதா? என்று எடை போட்டு பார்த்தார். அப்போது அளவு குறைவாக இருந்தது என்பதை தெரிந்து கொண்ட அந்த பேக்கரிக்காரர் விவசாயி மீது கடுங்கோபம் கொண்டார்.
 
 அதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்.
 அப்போது நீதிபதி விவசாயிடம், "வெண்ணெயை அளந்து பார்க்க எந்த எடை மிசினை உபயோகிக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி 'நியாயம்' என்று பதிலளித்தார்.
 பின் நீதிபதியிடம், "நான் பழங்காலத்தவன், என்னிடம் சரியான எடை மிசின் இல்லை. ஆகவே நான் ஒரு அளவுகோல் கொண்டு அளவு செய்வேன்" என்றார்.
 
 உடனே நீதிபதி "வேறு எப்படி வெண்ணெயை எடை செய்தாய்?", என்று கேட்டார். 
அதற்கு விவசாயி நீதிபதியிடம் "ஐயா! பேக்கரிக்காரர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வெண்ணெய் வாங்குவது வழக்கம், நானும் அவரிடமிருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன்.
 ஒவ்வொரு நாளும் பேக்கரிக்காரர் ஒரு பவுண்டு ரொட்டியை கொண்டு வந்த அதே சமயம், நானும் அதே அளவில் வெண்ணையை வெட்டி கொடுப்பேன். 
 
ஆகவே குறை, குற்றம் சொல்ல வேண்டுமெனில் அது என் தவறு இல்லை, அது முற்றிலும் பேக்கரிக்காரரை சார்ந்தது" என்று சொன்னார்."
 
  "நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதே தான் நமக்கும் விதிக்கப்படும்" என்று கூறி விளக்கினார்.


அவன் :என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க

இவன்: உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?

அவன்:இழுத்தேன். செயின் மட்டும் தான் அண்ணே வந்தது

இவன் :அப்போ மாமியார் என்ன ஆணாக ..?

அவன்:அவளதுதான் ..

இவன் : அட பாவி மனுசா..நீ எல்லாம் நல்லா வருவா .

அவன் : அதுக்கு தானே செயின் மட்டும் பிடித்து கொண்டேன் .

இவன் : ??????????????

ஆறறிவின் உச்சம்

மாடு மாதிரி
உழைத்தவர்களும்,

எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,

நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்

நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.

கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்.

பிரம்ம ஞானி

மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர்.
பிரம்ம ஞானி.


ஆடைகளையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.
ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தார்.
ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

இதைக் கவனித்த வியாசர் தன மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கடப் படுவார்களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.

ஆனால் சுகர் பெண்களைக் கடந்து செல்லும்போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.

ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெண்கள் சட்டென்று உடைகளை இழுத்துப் போர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம்.

தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

அப்பெண்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு அந்நேரம் இல்லை.

உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது.

அதனால் எங்களுக்கும் உங்களைப் பார்த்த உடன் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட்டதால் எங்களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடைகளை சரி செய்தோம்.''தன மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார்.

பாவங்கள்

பக்தர் ஒருவர் இறைவனிடம் வேண்டினார்:
இறைவா! நான் மூன்று பாவங்கள் செய்துள்ளேன்.

அவற்றை மன்னிப்பாயாக!முதலாவது,நான் செய்த பாவங்கள் எல்லாம்முன்னதாகவே உன்னால் மன்னிக்கப் பட்டவை என்று அறிந்தும் பாவ மன்னிப்பு கோரினேன்.

இரண்டாவதாக,நீ எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவன் என்று தெரிந்தும் உன்னைத்தேடி ஊர் ஊராக அலைந்தேன்.

மூன்றாவதாக என் மீது என்னை விட உனக்கு அக்கறை அதிகம் என்று தெரிந்தும்,எனக்கு அதைக்கொடு,இதைக்கொடு என்று வேண்டினேன்.

இம்மூன்று பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக!